dimanche 23 septembre 2007
samedi 1 septembre 2007
எனது தந்தை, பொன்னர்
எனது தந்தை, பொன்னர்
- கனக்ஸ் -
அது ஒரு குக்கிராமம். ஏறக்குறைய ஐம்பது வீடுகளைக் கொண்டது. இன்னும் டாடி, மம்மி நாகரீகம் எட்டிப்பார்க்காமையால், நான் தந்தையாரை அப்பு என்றே அழைப்பேன். இரண்டாவது உலகப் போர் முடிய மலாயாவிலிருந்து எம் ஊருக்கும் மூன்று நான்கு குடும்பங்கள் மூட்டை முடிச்சுடன் வந்து இறங்கின. இதிலே ஒரு குடும்பத்து பெண்தான் இந்த டாடி, மம்மி பண்பாட்டினை நம்மூரில் புகுத்தியவர்.‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதை நன்றாகவே உணர்ந்தவர்கள் நம் கிராமவாசிகள். எனவே, சிறிது நாகரீகத்தை எமது சிற்றூரின் வாழ்வியலில் புகுத்தியதன் நன்றி உணர்வினுக்காக இன்று வரை ஊரார் யாபேரும் அந்தப் பெண்மணியை, ‘மம்மி’ என்றே கௌரவமாய் அழைத்துத் தம் நன்றியறிதலைப் புலப்படுத்துகிறார்கள்.அப்பு ஆறடி உயரம். கொஞ்சம் கூட ஊனச் சதையற்ற வச்சிரம் போன்ற திடகாத்திர உடல்வாகு, தினசரி குறைந்தது ஒன்பது மணித்தியாலங்களாவது ‘மழையால் நனைந்து, வெய்யிலால் உலர்ந்து’ கழனியில் (வயல், தோட்டம்) கடின உழைப்பின் பெறு பேறு. அன்றைய கால விவசாயிகளுக்கே உரித்தான நெடிய தலை முடி பின்னே குடுமியாக நிற்க முன்னே வழித்ததலை. ஆக ‘ நீட்டலும் மழித்தலும்’ காணப்படவே செய்தது. கறுப்பு என்று சொல்லாவிட்டாலும் பொது நிறத்திற்குச் சற்று கூடுதலாக அந்தப் பக்கம். வெய்யிலில் நின்று உழைப்பவர்களுக்குக் கருமை நிறம் பாதுகாப்பான நிறமல்லவோ, எனவே, அந்த நிறம் வரப்பிரசாதம் தானே! சேட்டுப் போட்டதில்லை. ஓரெ ஒருமுறைதான் அவரைச் சேட்டுடன் பார்த்தேன். எனது மூத்த சகோதரர் இளம் வயதிலேயே மலேசியா சென்று விட்டார். அவரது தாய் மாமன் அவரைத் தன்னுடன் கூட்டிச் சென்று விட்டார். அவர் அங்கேயே தொழில் பார்த்து தனது மாமா மகளையே கல்யாணமும் செய்து அங்கு வாழ்ந்து வந்தார். ஊருக்கு வந்த போது குடும்பப் படம் ஒன்று எடுத்துச் சென்று தனது நண்பர்களுக்குக் காட்டவேணும் என்று ஆசைப் பட்டார். அப்புவை வெற்றுடம்புடன் காட்ட விருப்பமில்லாமையால் சேட்டைப் போடுமாறு பணித்த்தார். நாங்கள் கேட்டிருந்தால் மறுத்திருப்பார் ஆனால் கேட்டது மலேசியா மகனல்லவா.சம்மதித்தார்.பின்னர் அந்தச் சேட்டைக் கத்தரி வெருளிகுப் போட்டு தோட்டத்தில் விட்டு விட்டார்.மூன்று வேளையும் சோற்றினையே உட்கொள்ளும் பாங்கு. கேட்டால், ‘கஞ்சி கடப்படி, கூழ் குடத்தடி, தோசை கிணத்தடி, புட்டுப் பட்டணம், சோறு சொன்ன இடம்’ எனும் வக்கணை பேசும் திறன் உண்டு. உட்கொள்ளும் மாப்பொருள் யாவும் அன்றாட வேலையால் எரிக்கப் பட்டு விடுவதால் சதையின் இன்சுலினுக்குத் தன் வேலையைக் காட்டும் வாய்ப்பு இல்லாமையால் சலரோகம் எங்கே எட்டிப் பார்ப்பதாம்.பல் முப்பத்தி இரண்டும் இறுதிவரை கல் மாதிரியே இருந்தன.சிறிது கூட ஆட்டம் காட்டவில்லை.காலையில் வேப்பம் குச்சி அதற்கு வழிவகுத்தது. என்பார். அவர் காலால் பிறந்தவராம். இடது கால்தான் முதலில் வந்ததாம். அப்படிப் பிறப்பவர்கள் சுளுக்கு எடுப்பதில் வல்லவர்கள். முதலில் வெளியே வந்த காலால் சுளுக்குப் பட்ட இடத்தில் எண்ணை தடவி உருவி விடுவார்கள். சுளுக்குப் சரியாய்விடும்.ஒரு நாள் இரவு 7:00 மணி இருக்கும். நான் படிப்பதாய் பாசாங்கு பண்ணியபடி தலைவாசலில் உட்கார்ந்து இருந்தேன். ஐயாத்துரை என்பவர் கொக்குப் போலக் கழுத்தை நீட்டியபடி உள்ளே வந்தார். ஆள் நல்ல கறுவல் கழுத்து முழுக்க எண்ணை வழிய வழியப் பூசியபடி வந்து நின்றார். ‘என்ன வி~யம்’ என்றேன். ‘பொன்னண்ணை இல்லையோ’ என்றார். ‘அவர் தோட்டத்துக்குப் போய் விட்டார் வருகிற நேரம் தான்’ என்றேன.; ‘ அப்ப நான் திண்ணையில் இருக்கிறேன், வந்திடுவார் தானே’. அவர் கொழும்பில் வேலை பார்க்கிறவர். லீவில் வந்தவர், வந்தோம் போனோம் என்றிருக்கப் படாதோ, ஊர்ப் பெடியங்களுடன் கிளித்தட்டு விளையாடினாராம். பழைய கோபம் கீபமோ, இவர் உச்சியோட முனைய துரைரத்தினம் கழுத்திலே போட்டானாம் ஒரு போடு. அதற்குப் பின் அவருக்கு நேர்ப் பார்வை ஒன்று தான் வருகிறது. கழுத்து தடி வைத்துக் கட்டியது போல நேராக நிற்கிறது. அதோ அப்புவும் வந்து விட்டார். தோளில் மண்வெட்டி,தோட்டத்தில் வேலை செய்ததற்கு அறிகுறியாக கால் கை எல்லாம் ஒரேமண். மண் வெட்டியை ஒரு பக்கமாக வைத்தவர். ‘என்ன ஐயாத்துரை’ என்றா.; ‘ ஒன்றும் இல்லை அண்ணை, இந்தக் கழுத்திலை’ என்றார். ‘எங்கை விடு பார்ப்போம்’. ‘இல்லை அண்ணை, நீங்கள் போய் கையைக் காலை கழுவிப் போட்டு வாருங்கோவன்’. ‘ அப்படிச் செய்தால் ஒன்றும் சித்தியாகாது, நீ கொஞ்சம் பொறுமையாய் இரு’ என்று கூறியபடி கழுத்தினைச் சற்று திருப்பினார். ‘ஐயோ அண்ணை, கொஞ்சம் மெதுவாக செய்யுங்கோ, சரியா நோகுது’ என்றார் ஐயாத்துரை. அப்பு தலைவாசல் வளையை ஒரு கையினால் பிடித்தபடி தனது இடது காலைத் தூக்கி ஐயாத்துரையின் கழுத்திலே மெல்ல ஒரு அமுக்கு. ‘ஐயோ’ என்ற குரல் அசரீரியாக மாத்திரம் கேட்டது. அங்கே பார்த்தேன். ஐயாத்துரையை எங்குமே காணமுடியவில்லை. அப்பு மாத்திரம் ‘காலைத்தூக்கி நின்றாடிய தெய்வமாய்’ நின்ற இடத்திலே நிற்கிறார். என்ன நடந்தது? வாமனா அவதாரத்தில் கிரு~;ண பரமாத்மா இப்படித்தான் காலை வைக்க மகாபலி பாதாளம் போன கதைதான் மீள நடக்கிறதோ? ஆனால் அங்கே தலையில் அல்லவோ காலை வைத்தார். இங்கே தோள்மேல் தான் கால் வைக்கப் பட்டது. இது கலிகாலம். எட்டிப் பார்க்கிறேன். நிலத்தில் ஏதேனும் அடையாளம் தெரிகிறதா என. சிறிது நேரத்தில் பக்கத்து, முன்வீட்டுக்காரர் மூலம் விசயம் வெளிச்சத்துக்கு வந்தது.‘என்ன கொழும்பு ஐயாத்துரை அலறியபடி திரும்பிப் பார்த்துக் கொண்டு உந்தப்பக்கத்தால் ஓடுகிறான்’என அவர்கள் கேட்டதும் உண்மை தெரிந்தது. அதற்குப் பின் அவர் வைத்தியம் பார்க்க வரவில்லை. கால் உழக்கினால் சுளுக்குச் சரி வந்ததோ அல்லது ஓடும் பொழுது திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு ஓடியமையால் கழுத்து இயல்பு நிலையை அடைந்ததோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.இது கைமருந்து அப்புவிடம் இன்னொன்றினுக்கும் வைத்தியம் பார்க்க வருவார்கள்.அதற்கும் காலால் பிறந்ததற்கும் ஏதேனும் தொடர்பு உண்டோ என என்னைக் கேளாதீர்கள். அது கால் வைத்தியம் இல்லை கை வைத்தியம். உண்ணாக்கு என்பது வாய்க் குழியின் கூரையில் இருந்து தொங்கும் ஒரு சிறிய சதைப்பாங்குடைய சிறு சோணை. சிலருக்கு சில சமயங்களிலே உண்ணாக்கு சற்று நீட்சி;றும்.அது சூட்டினால் எனக் கூறுவார்கள். நாக்கு மேல் நோக்கி உயரும் போது நீட்சியுற்ற உண்ணாக்கில் பட இம்சையாக இருக்கும். தொடர்ச்சியாக இருமல் வரும். அப்படியான உபத்திரவம் உள்ளவர்கள் அப்புவிடம் வருவார்கள். அவர்களின் தலையின் உச்சியிலே இரண்டு மூன்று மயிர்களைப் பிடுங்கிய பின்னர் அவ்விடத்திலே முடிதும்பை எனும் ஒரு பூண்டின் இலையினால் நன்கு உரஞ்சி விடுவார். வாய் பேசாமல் செய்தால்தான் நாணமாம். இரண்டு மூன்று நாட்கள் இப்படிச் செய்ய உண்ணாக்கு சுய நிலைக்கு வந்து விடுமாம்.எனது தாத்தாவைப் போன்று இவருக்கும் வடக்கன் மாடு வைத்திருப்பதில் அலாதி பிரியம். பெரிய வண்டில். அதற்குக் கழற்றி வைக்கக் கூடிய கூடாரம். மாடுகளின் எண்ணை பூசி மினு மினு என மினுங்கும் சற்றே வெளி வளைந்த வெள்ளைக் கொம்புகளைச்சுற்றி வெள்ளியினாலான சங்கிலி, தோல் மடிப்பாகத் தொங்கும் கழுத்தினைச் சுற்றி கலகலவெனச் சத்தமிடக் கூடிய வெண்டையங்கள் கொண்ட வெள்ளிச் சங்கிலி, கொம்புகளுக்கிடையே பெரிய பட்டுக் குஞ்சம். மூன்றடி நீளமான பிரப்பந்தடியுடன் அப்பு கம்பீரமாக ஆசனத்தட்டில் அமர்ந்து கொள்ள, சல சல எனும் சலங்கைச் சத்தம் சடசடவென்ற சில்லுச்சத்தத்துடன் லாடம் அடித்த கால்களால் மாடுகளின் பவனியில் நாம் உள்ளே இருந்து கொண்டு பயணணம் செய்யும் பொழுது ஏற்படும் குதூகலத்துக்கு இணையாக நான் பின்னர் ஆகாய விமானத்தில் பயணித்த போதும் அனுபவித்ததில்லை. அவருக்கு பெரிதாககடவுள் விசுவாசம் இல்லை ஆனால் நாஸ்த்திகரல்லர். வருடத்தில் ஒரு முறை பன்றித் தலைச்சி அம்மன் கோவிலுக்குக் கட்டாயம். போவார் பன்றித் தலைச்சி அம்மன் கோவில் மட்டுவிலில் உள்ளது. அதற்கு ஒரு ஸ்தல புராணமும் உண்டாம். புதைக்கப் பட்ட மாட்டுத் தலையினை பன்றித் தலையாக அந்த அம்மன் மாற்றியதாகச் சொல்வார்கள். மாடு வளர்ப்பவர்கள் பெரும் பாலோர் அங்கு சென்று பொங்கல் வைப்பது வழமை. பங்குனி மாதத்துத் திங்கட்கிழமைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எமது ஊரில் இருந்து ஆறு ஏழு வண்டில்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை அப்புவின் தலைமையில் புறப்பட்டுச் செல்லும். எம்போன்றோர் ஆவலுடன் எதிர் பார்த்து நிற்கும் வருடாந்த பிக்னிக் இதுதான். விடியற் காலை கோவிலைச் சென்றடைவார்கள்.மோதகம் அவித்து பொங்கல் வைத்து படைத்த பின் மதியம் மீண்டும் பயணம் ஆரம்பிக்கும். எல்லோரும் மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய் வாங்கிக் கொண்டு வருவார்கள். கோள வடிவினதாக, வெள்ளை, கத்தரிப்பூ நிறங்களிலே பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். வருகிற வழியில் நிலாவரை கட்டாயம் பார்க்கின்ற ‘பிக்னிக் ஸ்தானம்’. அதன் ஆழம் பற்றியும் அதன் உள்ளே போடப் பட்ட எலுமிச்சம் பழும் கீரிமலையில் மிதந்ததாகவும் கூறப்படும் கதை வருடாவருடம் எமக்குச் சொல்லப் பட்டாலும் வாயைப் பிளந்தபடி அதனைக் கேட்பதில் ஒரு ஆனந்தம் இருக்கவே செய்தது. அது காதலா?இந்த வடக்கன் மாடுகள் இந்தியாவில் காங்கேயத்தில் இருந்து வாங்கி வருவார்களாம். அனேகமாகப் பருத்தித்துறையிலே கொண்டு வந்து இறக்குவார்கள்.இளம் நாம்பன் மாடுகளாகக் கொண்டு வருவார்கள். ஆகவே இறக்கி கடலில் நடத்திய படியே கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். அப்படி நடத்திக் கொண்டு வரும்போதே மாட்டுக்கு நலம் போட்டு விடுவார்களாம். இங்கே நலம் போடும் பொழுது மாட்டின் விதையினைக் கைளால் கசக்கிக் கரைத்து விடுவார்கள்.மாடு நீரில் உள்ளமையால் அதனால் ஒன்றும் எதிர்த்துப் போராட முடியாது. வன்னி மாடுகளுக்கு நலம் போடுதலுக்கு வித்தியாசமான முறையினைக் கையாள்வார்கள். மாட்டின் நான்கு கால்களையும் கட்டி அதனை வீழ்த்திய பின்னர் ஏ போன்று இடுக்கி அமைப்பிலே கட்டப்பட்ட இரு தடிகளுக்கிடையே விதையினை வைத்து நசுக்கிக் கரையச் செய்து விடுவார்கள். நாய்களுக்கென்றால் விதைப் பையினை வெட்டித் திறந்து விதைகளை முற்றாகவே அகற்றி விட்டு உள்ளே சாம்பல் வைத்துத் தைத்து விடுவார்களாம். பார்க்கும் பொழுது குரூரமாயும் கொடுமையானதாகவும் தெரிந்தாலும் நலமிடுதல் வீரியத்தைக் கூட்ட உதவும் என அவர்கள் நம்பினார்கள். மகாத்மா காந்தி கூட நலமிடுதலை அங்கீகரித்துள்ளார்.வடக்கன் மாடுகளுக்கும் வன்னி மாடுகளுக்கும் தொழில் ரீதியாக இரண்டு வேறுபாடுகள் உள்ளன. வடக்கன் மாடுகள் வண்டிச் சவாரிக்கு உபயோகப் படுவதில்லை. அவையால் வேகமாக ஓடமுடியாது. வன்னி மாடுகளே வண்டிச் சவாரிக்கு உபயோகிக்கப் படுவன. சூடுமிதித்தலுக்கும் பொதுவாக வடக்கன் மாடுகள் உபயோகிக்கப் படுவதில்லை. யானை வைத்துச் சூடு மிதித்தலை இலக்கியங்களில் தான் காணலாம். நம் ஊர்களிலே மாடுகளே சூடுமிதித்தன. வன்னி மாடுகள் தான் பொதுவாக பயன்படுத்தப் பட்டாலும் சில சமயங்களிலே வடக்கன் மாட்டினை முதல் நடக்கும் பொலி மாடாகப் பாவிப்பார்கள்.எருது மாடுகள் விலைக்கு வாங்குதற்கும் அப்புவின் உதவியைப் பலர் நாடுவதுண்டு. மர்ட்டின் விலையைக் கணிப்பதற்கு அதன் வயதினை நிர்ணயம் செய்ய வேண்டும். வயதினை எப்படிக் கணிப்பார்கள் nதிரியுமா? மாடு கடைவாய் போட்டு விட்டதா என அதன் வாயுள்ளே கை வைத்துப் பார்ப்பார்கள். கடைவாய் என்பது அரைக்கும் பற்களான கடைவாய்ப் பற்கள். இவை கன்று பிறக்கும் போது இருப்பதில்லை. பின்னரே முளைக்கின்றமையால் மாடு வளர்ப்பதில் தேர்ந்N;தார்கள் கடைவாய்ப் பற்களின் விருத்தி நிலையை வைத்தே மாடுகளின் வயதினை சந்கேத்துக்கு இடமின்றிக் கூறிவிடுவார்கள். அப்பு இதில் விற்பன்னர்.அவர் கூறினால் மறு பேச்சில்லை. மாடுகள் இரைமீட்பவை. அவை பொதுவாக அவசரமவசரமாகப் பகலில் உணவை உட்கொண்டு பின்னர் இரவில் நிம்மதியாகப் படுத்தபடி கவளம் கவளமாக உணவை மீண்டும் எடுத்து ரசனையுடன் மெல்லுகின்றன. அப்பொழுது தான் கடை வாய்ப்பற்கள் உபயோகிக்கப் படுகின்றன.அப்பு சொல்லுவார் ‘ சில வம்பிலை பிறந்ததுகள் இரவிலே மாடு இரை மீடு;கும் பொழுது கையைவிட்டு கவளங்கள் சிலவற்றை எடுத்து வெளியாலே போட்டு விட்டு, மறுநாள் வந்து சொல்லுவார்கள், மாடு இரை கக்கிறது எனவே கடைவாய்ப் பல் சரியில்லை என விலயைக் குறைப்பதற்குப் போரம் பேசுவார்கள்’. அதைப் பொய் என நிரூபிப்பதற்கு அப்பு சிலசமயம் மாடு வாங்கியவர் வீட்டிலே இரவு தங்க வேண்டியும் வருவதுண்டாம். அப்படித் தங்கப் போனதில் அப்புவுக்கு ஒரு அதிரு~;டம் அடித்ததாக அம்மா கூறுவார்.கார்த்திக்கேசுக்கு அடுத்தடுத்து நாலு பெண்கள்.சும்மா சொல்லக் கூடாது நர்லும் கொஞ்சம் அம்சமான பெண்கள் உன்னைப்பார் என்னைப் பார் என்று. கார்த்தி, ‘கோழி மேச்சாலும் கோர்ணமெந்து உத்தியோகம’; என்ற தத்துவத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார் ஆனால் ஒரு கல்யாணம் ஒப்பேற்றவே ஏழு செருப்புத் தேயுமாம், அப்போ இருபத்தி எட்டுச் சோடிச் செருப்புக்கு அவர் எங்கே போவார். எனவே மெல்லக் கொஞ்சம் கீழே இறங்கி வந்தார் கார்த்தி.வசமாக மாட்டிக் கொண்டார் அப்பு. அப்பு மாட்டுத் தொழுவத்தில் மாட்டைப் பார்ப்பதோடு நின்று விட அவரென்ன விசுவாமித்திரரா? அடுக்களைப் பக்கம் நாலு மேனகைகள் ஒருங்கே நிற்பது கண் கொள்ளாக் காட்சி. அன்று மாடு ஓழுங்காக இரைமீட்டது. ஆனால் அப்புவோ மறுநாளும் வந்து பார்த்துத்தான் பற்களைப் பற்றி ஊர்ஜிதம் செய்யலாம் என்று கூறி மறுநாளும் பிரசன்னம்.காரணம் கார்த்திக்குப் புரியாமல் இல்லை. இது மாத்திரமல்ல அதன் பின் அப்பு தோட்டம் போகின்ற பாதையே இந்த ஒழுங்கைதானாம். மர்டுகளில் சலங்கை ‘ஜல், ஜல்’ எனச் சத்தமிட அப்பு கடைக்கண்ணால் கார்த்தி வீட்டைப் பார்த்தபடி நடப்பது வெகுநாள்நீடிக்கவில்லை. கார்த்தி இயமனைப் பச்சடி போட்டவர்.வீரபத்திரரையே அடிபணிய வைத்தவர். எப்படி? எமது கிராமத்தின் மூன்று திசைகளிலும் காவல் தெய்வங்களாக வைரவர் ஆலுக்கும் அரசுக்கும் கீழ் குந்தியிருக்க மேற்கு எல்லையில் மாத்திரம் ஒரு வீரபத்திரர் எங்குமே காணாத வித்தில் எழுந்தருளி காவல் பணியினை மேற் கொண்டுள்ளார். இந்தச்சிறு ஆலயத்தைப் பராமரிப்பது கார்த்தி. காலையில் கூட்டித் துப்பரவாக்கி மாலையில் விளக்கோற்றுவது எல்லாம் ஒழுங்காககச் செய்து வீரபத்திரரையே குலதெய்வமாகக் கொண்டார்.ஒவ்வொரு முறையும் பெண் குழந்தை பிறக்கும் பொழுது அடுத்தமுறை வீரபத்திரர் ஆண்பிள்ளை தருவார் என்று கூறியபடி தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டார். முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மை ஆனால் வீரபத்திரர் தொடர்ந்து காலை வாரிவிட நாலாவதும் பெண் என்றதும் கார்த்திக்குச் சொல்ல முடியாத கோபம்.வந்த கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே உணராமல் கோவில் கூட்டும் விளக்குமாறால் வீரபத்திரருக்குச் சாத்தோ சாத்தென்று சாத்திவிட்டதுடன் விளக்கு வைப்பதையும் நிறுத்திவிட்டார். இது தெய்வ நிந்தை என்று எத்தனை பேர் எடுத்துச் சொல்லியும் அவர் மனம்மாறவில்லை. எனவே வேறொருவர் பராமரிப்பை மேற் கொண்டார். ஆனால் ஆச்சரியம்! சரியாகப் பத்தாவது மாதம் கார்த்தியின் சகதர்மிணி ஓர் ஆண்மகவுக்குத் தாய். ஊர் வாயைப் பிளந்தது. பிளந்தவாய் மூடப்படாமல் மேலும் மேலும் ஆச்சரியங்கள் நடந்தன, அடுக்கடுக்காய் அடுத்து நான்கு பிள்ளைகள் எல்லாமே ஆண்கள். ‘அடியில்லாவிட்டால் அண்ணன் தம்பி உதவான’; என ஊரே ஒப்புக் கொண்டது. கார்த்தி மீண்டும் கோவில் பராமரிப்பை மேற்கொண்டார். அப்படிப் பட்ட கார்த்தியிடமிருந்து அப்பு எப்படித் தப்புவதாம். ‘கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு’ என அம்மா சொல்லாமலேயே சட்டுப் புட்டு என எல்லாம் முடிந்து விட்டது. கார்த்திக்கும் ஏழு செருப்பு மிச்சம். அந்தப் பெரிய குடும்பத்தில் மூத்த மாப்பிள்ளையாய் அப்பு புகுவதில் தாத்தா தம்பருக்கு அவ்வளவாக சம்மதம் இல்லை என்பது உண்மை.அப்புவின் சயிக்கிள் பிரயாணம் அப்புவுக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது.அவரிடம் தானே பு~;பக விமானத்தை ஒத்த வண்டி உள்ளது. பிறகு ஏன் வேறு வாகனங்கள்.எனவே சைக்கிளில் பின்னுக்கும் இருந்து போனதில்லை. ஒரு நாள்.அவசரமாக ஒருவர் வந்தார். கொத்தியாவத்தையில் ஒரு மாடு பார்க்க வேணும் என்றார். எப்படிப் போவது? தனது சைக்கிளில் அப்புவைப் பின்னுக்கு இருக்கு மாறு கேட்டார்.அப்புவுக்கோ அதில் பழக்கம் இல்லை.அவருடைய சைக்கிளின் பின்ஆசனம் சந்தைக்குச் சாமான் கொண்டு போவதற்கு இசைவாக சற்று அகலமாக அமைந்தது. எனவே அப்புவை ஒரு மாதிரியாக அதில் ஏறி இருக்கப் பண்ணி தான் ஏறி கவனமாக மிதித்துக் கொண்டுசென்றார். சிறிது தூரம் சென்றதும் இருவருமே பரிச்சயப் பட்டு விட்டதால் கதைத்த படி சென்றார்கள். அப்பு ஆசனத்தின் பிற்புறத்தைக் கெட்டியாகப் பிடித்தபடி இருந்தவர் கையை விட்டு விட்டு இருக்க தொடங்கி விட்டார். கதை மும்முரத்தில்காலையும் நீட்டிவிட நீண்ட அவர் கால்கள் தெருவோரத்தில் நடந்த ஒருவரைப் பதம் பார்த்தது மாத்திரமல்ல அப்புவையும் வீதியிலே பத்மாசனம் போடவைத்தது.சைக்கிள் ஓடியவருக்கு நடந்தது ஒன்றும் தெரியாத கதை மும்முரம். சிறிதூரம் போனபின்னர் தான் பக்கப் பாட்டு வரவில்லையே என எண்ணி “என்ன பொன்னண்ணை, பேச்சு மூச்சைக் காணவில்லை, நித்திரையோ’ என்றார். குரல் இல்லை.பொன்னன்ணைக்கு என்ன நடந்தது.சயிக்கிளைத் திருப்பி வேகமாக வந்தார்.' பாழாப் போனவங்கள் கரையாலே நடங்தால் என்ன' என பொன்னண்ணை வசை பாடிக் கொண்டிருந்தார். பொன்னன்ணை குண்டியில் அடிபட்டு வீதி ஒரத்தில் இருப்பது அவருக்குத் தெரிய சிறிது நேரம் எடுத்தது. அப்பு உளுக்குப் பார்க்க யாரிடமும் செல்லவில்லை. ‘ஐயோ,ஐயோ’ என அலற அலற அம்மா தான் நோ எண்ணை போட்டு இரண்டு மூன்று நாட்கள் உருவிவிட்டா.அப்பு மாதம் ஒரு முறை முழுகுவார். அன்றைய தினம் அவர் முற்றாகவே ஓய்வெடுக்கும் தினம். அது ஒரு வைபவம் போல இருக்கும். காலையில் உண்பதில்லை. பத்து மணியளவில் தலை உடல் எல்லாம் வழிய வழிய எண்ணெய் பூசி உடல் ‘மசாச’; செயப்படும். பின்னர் பன்னிரண்டு ஒரு மணியளவில் அரப்பு உடன் சேர்த்து அவிக்கப் பட்ட இரு எலுமிச்சம் பழங்கள் தலைக்கும் உடலுக்கும் பூசியபின் அரப்பு தலைக்கு பூசப்படும். இவ்வளவும் அம்மாவின் வேலை. பின்னர் அவசர அவசரமாகக் கிணற்றில் இருந்து வாளியால் தண்ணீர் அள்ளி அள்ளி தலையில் ஊற்றுவார். சவர்க்காரம் உபயோகப் படுத்தப் படுவதில்லை. ஆனால் அருகே உள்ள கமுகு முதுகு உரஞ்சப் பயன் படும். நம் ஊர்களில் அநேகமாக எல்லா வீடுகளிலுமே கிணற்றடியில் ஒன்றோ இரண்டோ கமுக மரங்கள் இருக்கும். வீதி ஓரத்தண்ணீர்;த்; தொட்டிகளில் நீர் குடிக்கும் கால் நடைகளின் உடலை உரோஞ்சுவதற்காக ஆவுரோஞ்சிக் கற்கள் உள்ளதோ அதே போன்று தான் குளிப்பவர்கள் தமது முதுகை உரோஞ்சுதற்காக கிணற்றடியில் கமுக மரங்கள் வைத்திருப்பார்கள். அதில் ஒன்று தான் வீட்டுக்குரியவர் இறந்தால் பாடை செய்வதற்காகத் தறிப்பார்கள்.ஏனைய மரங்கள் போலல்லாது கமுகு மழுமழுப்பானது. எனவே முதுகு உரோஞ்ச இதமானதாக இருக்கும்.முழுகி உடல் துவட்டு முன்னரே அம்மா கையில் ஒரு கிண்ணம் நிறையச் சரக்குத் தண்ணியுடன் நிற்பார். நன்றகச் சரக்கு உள்ளி வைத்து அரைத்து நன்கு வற்றக் காச்சிய அதில் இரண்டு மீன் துண்டும்இருக்கும். அதனைக் குடித்த பின்னரே உடல் துவட்டப் படும். உடல் துவட்டியபின் ஒரு பத்து உள்ளிப் பூடுகள் சுட்டு வைத்திருக்க அதையும் உட் கொண்ட பின் தான் மதிய உணவு. அவர் இறைச்சி உண்பதில்லை. எனவே மீன்கறிதான். ஆனால் கத்தரிக்காய் பால்கறி முக்கியம். சாப்பிடு முன் அக்கறியுள் இரண்டு மேசைக் கறண்டி நல்லெண்ணை விட்டால்தான் சாப்பாடு முழுமை பெறும். இதன் காரணமாகத் தானோ இறுதிவரை உடல் வைரம் பாய்ந்ததாகக் காணப் பட்டது.

Inscription à :
Commentaires (Atom)